பதற்றத்தின் உச்சத்தில் தேர்தல்: இணைய சேவைகளை முடக்கிய அரசு
புதிய இணைப்பு
இணையதளம் மற்றும் மொபைல் போன் சேவையை நிறுத்த பாகிஸ்தான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் ஏற்படக்கூடிய அமைதியின்மை மற்றும் பயங்கரவாதச் செயல்கள் மற்றும் தேர்தலின் மூலம் ஏற்படக்கூடிய எதிர்பாராத அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் இணைப்பு
பாகிஸ்தானின் 12ஆவது பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று (08.2.2024) ஆரம்பமாக்கியுள்ளது.

வன்முறை, அரசியல் நிச்சயமற்ற தன்மை, பொருளாதார நெருக்கடி போன்ற சவால்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது.
நாடு முழுதும் 90,582 வாக்களிப்பு நிலையங்களில் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த பாதுகாப்புடன் தேர்தல்
128 மில்லியன் வாக்காளர்கள் இவ்வருட பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று (07) தேர்தலுக்கு ஒருநாளே இருந்த வேளையில் இரண்டு குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தேர்தல் வேட்பாளர்களின் அலுவலகங்களுக்கு அருகாமையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் தேர்தல் அறிவித்த காலப்பகுதியில் இருந்தே அவ்வப்போது வன்முறைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri