மன்னாரிலும் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு
முள்ளிவாய்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்திலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மத தலைவர்கள், மன்னார் நகர முதல்வர் , பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து மாலை அணிவித்துச் சுடரேற்றி , மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து
உப்புக்கஞ்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
