இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜெ.வி செல்வநாயகத்தின் ஜனன தினம் அனுஷ்டிப்பு
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜெ.வி செல்வநாயகத்தின் 124ஆவது ஜனன தினம் நாட்டின் பல பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜெ.வி செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 124ஆவது ஜனன தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவிடத்தில், தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தின் தலைவரும் தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயருமான சுப்பிரமணியும் ஜெபநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
வவுனியாவில் தந்தை செல்வாவின் 124ஆவது ஜனன தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் திருவுருவ சிலையடியில் இன்று காலை 9 மணியளவில் நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா தலைமையில் இந்நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அன்னாரது நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்ததுடன், மலரஞ்சலியும் செலுத்தியிருந்தனர்.
தந்தை செல்வநாயகம் தொடர்பான நினைவு பேருரையினை நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா நிகழ்த்தியிருந்தார்.
மன்னார்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் 124வது பிறந்த தின நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சிலையடிக்கு முன் இன்று காலை இந்நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளைச் செயலாளரும் மன்னார் நகர சபையின் உப தவிசாளருமான ஜான்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், இலங்கை தமிழரசு கட்சி மன்னார் கிளையின் முக்கிய உறுப்பினர்கள், மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்,கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டு, சிறப்பு உரையும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - ஆசிக்







மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
