யாழில் 123 இந்திய படகுகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!
இலங்கை கடலில் அத்துமீறி உள்நுழைந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 123 இந்திய ரோலர் படகுகளை அறிவித்தல் கிடைத்ததும் கடலில் புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற்தொழில் நீதியியல் வள திணைக்கள யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல்
யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம்(30.05.2025) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் கடற்தொழில் விடயதானங்களின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ''சுமார் 3 தொடக்கம் 4 வருடங்களாக யாழ். மயிலிட்டி துறைமுகத்தில் இந்திய அத்து மீறிய ரோலர் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இடர்பாடுகள்
இந்தப் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் எமது உள்ளூர் கடற்தொழிலாளர்கள் தமது படகுகளை கட்டுவதில் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதன் காரணமாக குறித்த படகுகளை கடலில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் கடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உபகரணங்களை குறித்த ரோலர் படகுகளிலிருந்து அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறன.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்ததும் கடலில் புதைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.''என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 21 மணி நேரம் முன்
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri