பாகிஸ்தானில் 72 வயதானவருக்கு மணமகளாக்கப்பட்ட 12 வயது சிறுமி: வெளியான காரணம்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பெசாவரில் பொலிஸார் 12 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற 72 வயது முதியவரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த திருமணம் நடப்பதற்குள் அதிகாரிகள் தலையிட்டு, 72 வயதானவரை கைது செய்துள்ள நிலையில் சிறுமியின் தந்தை சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சிறுவர் அமையம்
விசாரணைகளின்போது சிறுமியின் தந்தை, தனது மகளை 72 வயது மணமகனுக்கு 500,000 பாகிஸ்தான் ரூபாய்க்கு விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது.
உலகிலேயே அதிகமாக சிறுவர் திருமணங்களின் நடைபெறும் நாடுகளில் பாகிஸ்தானில் ஒன்றாகும்.

ஐக்கிய நாடுகள் சிறுவர் அமையத்தின் தகவல்படி, பாகிஸ்தானில் 18.9 மில்லியன் சிறுமிகள் 18 வயதை அடையும் முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள்.
மேலும், 4.6 மில்லியன் சிறுமிகள் 16 வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கதவை திறக்க பிக்பாஸிடம் கூறிய பிரஜன்... பரிதாப நிலையில் விக்ரம்! வெடிக்கும் சண்டை Manithan
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri