எதிர்க்கட்சிகளுடன் 12 நாடுகளின் தூதுவர்கள் சந்திப்பு (photos)
12 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்றுள்ளது.
நேற்று (22.03.2023) இவ்விசேட கலந்துரையாடல் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்த விடயங்களைத் தெளிவுபடுத்தும் பிரதான நோக்கத்துடன் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பு
இக்கலந்துரையாடலின் போது, இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டல், அரசமைப்பைப் பாதுகாத்துக் கொள்ளல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கையைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்குமாறு வெளிநாட்டுத் தூதுவர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.
இந்தச் சந்திப்பில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலாந்து, நெதர்லாந்து, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.



தெஹ்ரான் இதுவரை கண்டிராத மிக உக்கிர வான்வழித் தாக்குதல்: தாழ்வாகப் பறந்த போர் வானூர்திகள் - அதிர்ந்த நகரம்
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
நாட்டின் முக்கிய நகரங்களில் நெருக்கடி! பணிக்கு வராதோருக்கு கடும் எச்சரிக்கை - வெளியான அதிரடி அறிவிப்பு
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam