வாகன அனுமதிப்பத்திரம் கோரியுள்ள 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பொருளாதார நெருக்கடிக்குள்ளும் இலங்கை நாடாளுமன்றத்தின் 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் வாகன அனுமதியை கோரியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
வாகன அனுமதிப்பத்திரம் கோரி 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வாகன அனுமதிப்பத்திரம்
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வாகனங்களை பெற்றுக் கொள்ளாமல் வெளியில் விற்பனை செய்வதற்கே இந்த அனுமதியை கோருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாகன அனுமதிப்பத்திரத்தை கோரியவர்களில் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக நலிந்த ஜயதிஸ்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |