நெடுந்தீவு இளைஞர் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் காயங்களுடன் கைது
யாழ்(Jaffna). நெடுந்தீவு இளைஞர் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரை பொலிஸார் தேடி வருகின்ற நிலையில் சந்தேக நபர் ஒருவர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக நேற்று(19) இரவு மது போதையில் கொலை செய்யப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, நெடுந்தீவு 07ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் (வயது 23) என்பவரே அடி காயங்களுடன் குறித்த பகுதியில் சடலமாக இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டு நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காயம் அடைந்த சந்தேக நபர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஏனைய மூன்று சந்தேக நபர்களையும் தேடி கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan