ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 112 முறைப்பாடுகள்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 112 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலேயே குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு இதுவரை 87 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் மேலாண்மை மையம்
மேலும், மாவட்ட தேர்தல் மேலாண்மை மையத்தில் 25 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 9 வரை 269 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளன. இதில் ஒரு வன்முறையும் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 269 விதிமீறல்களில் 189 விதிமீறல்கள் தேசிய தேர்தல் மேலாண்மை முறைப்பாட்டு மையங்களிலும், 77 மாவட்ட தேர்தல் மேலாண்மை முறைப்பாட்டு மையங்களிலும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |