உயிரை பறிக்கும் நோய்! மக்களின் அறியாமை குறித்து வைத்தியர் கூறும் விடயம்
மக்களின் அறியாமை காரணமாக, நீர்வெறுப்பு நோயால் (வெறிநாய்க்கடியால்)மரணங்கள் பதிவாவதாக தொற்றுநோயியல் நிறுவனத்தின் சமூக வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரன தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த ஆண்டு நீர்வெறுப்பு நோயால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நீர்வெறுப்பு நோய்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''முந்ததைய ஆண்டை விட கடந்த ஆண்டு, இறந்தவர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க முடிந்தது. ஆனால் இந்த ஆண்டு, ஏற்கனவே 11 இறப்புகள் பதிவாகியுள்ளன.
நீர்வெறுப்பு நோயால் ஏற்படும் மரணங்கள் தொடர்பில் விழிப்புணர்வு இல்லாததும் சிகிச்சைகள் முறையாக பெறப்படாமையுமே இந்த மரணங்களுக்கு காரணமாகும்.
விலங்கு கடிக்கு உள்ளானால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
பொதுவாக, விலங்கு கடியால் உருவாகும் வைரஸ் உடலில் நுழைந்த அறிகுறிகள் மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்களில் தெரியவரும்.
தடுப்பூசி
இவ்வாறு விலங்கு கடித்த ஒருவர் நீர்வெறுப்பு நோய் தடுப்பூசியை பெறவில்லையாயின், மூன்று மாதங்கள் வரை தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவும்.
தற்போது, இலங்கையில் உள்ள சுமார் 300 அரச வைத்தியசாலைகள் நீர்வெறுப்பு நோய் தடுப்பு மருந்தை வழங்குகின்றன.
கடுமையான கடி ஏற்பட்டால், அது தொடர்பான தடுப்பூசியும் சுமார் 100 மருத்துவமனைகளில் கொடுக்கப்படுகிறது. இது இலவசமாக வழங்கப்படுகிறது.''என்று கூறியுள்ளார்.
You may like this,





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
