இந்தியா-இலங்கை கப்பல் சேவை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு
இந்தியா- நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் திகதி 'சிவகங்கை' பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
சோதனை ஓட்டம்
அதற்கமைய அன்றைய தினம் காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட 'சிவகங்கை' பயணிகள் கப்பல், நண்பகல் 12 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், நாகபட்டினம் முதல் காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் அக்டோபர் 23ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
