11 ஆயிரம் சிறுவர்கள் பொலிஸாரினால் கைது! வெளியான அதிர்ச்சி தகவல்
கடந்த ஒரு வருட காலத்திற்குள் போதைப் பொருள் பழக்கத்துடன் தொடர்புடைய 11 ஆயிரம் சிறுவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வுட்லர், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,
பொலிசாரினால் கைது
இலங்கையில் கடந்த 2025 ஒக்டோபர் 30 முதல் இதுவரை 11,131 சிறுவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் 233 சிறுமிகளும் உள்ளடங்கியுள்ளனர்.

பாடசாலைகள் மற்றும் டியூஷன் வகுப்புகள் நடைபெறும் பகுதிகளைக் குறிவைத்து போதைப்பொருள் விநியோகம் செய்யப்படுவதாகத் தொடர் முறைபாடுகள் வந்துள்ள நிலையில், அதுகுறித்து தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.
ஐஸ்கிரீம், மிட்டாய் (Cotton Candy) மற்றும் காரவெற்றிலை (சாரவிட்ட) போன்ற சிறுவர்கள் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களுக்குள் போதைப்பொருட்கள் மறைத்து விற்கப்படுவதாக முறைபாடுகள் வந்துள்ளன.
குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கங்கள்
இதுதொடர்பாக அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். சிறுவர்கள் போதைப்பொருள் பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க பெற்றோர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கங்கள், நடத்தை, அவர்கள் பேசும் விதம் மற்றும் நண்பர்கள் வட்டம் (Social Circles) ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைப் பெற்றோர் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
இந்த மாற்றங்கள் அவர்கள் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் சிக்கியிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வுட்லர் தொடர்ந்தும் எச்சரித்துள்ளார்.