மட்டக்களப்பில் இன்றையதினம் 104 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் 104 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி நா.மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்குள்ளானோரை கண்டறியும் வகையில் தொடர்ச்சியான அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இன்றைய தினம் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு வெட்டுக்காடு,ஊறணி,இருதயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தொற்றாளர்களை இனங்காணும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள்,கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,பிரதேச மக்கள் என பலருக்கு இன்றைய தினம் பீ.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய தினம் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 08 பேரும் ,ஆரையம்பதி சுகாதார பிரிவில் 23 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேரும்,கோறளைப்பற்று மத்தி சுகாதார பிரிவில் 14 பேரும், களுவாஞ்சிகுடியில் 07 பேரும், வாழைச்சேனையில் ஒருவரும், ஓட்டமாவடியில் 08 பேரும், செங்கலடியில் 05 பேரும், பட்டிப்பளையில் 02 பேரும், கிரானில் ஒருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருமாக 104 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri