உலகிடமிருந்து ஈரான் மறைக்கும் பேரவலம்.. கொடூர மரணங்களின் பிரத்தியேக புகைப்படங்கள் அம்பலம்
ஈரானின் கொடூர அடக்குமுறையில் உயிரிழந்த நூற்றுக்கணக்கானோரின் முகங்கள் வெளிச்சமாகியுள்ளன என்று பிரதான சர்வதேச ஊடகம் ஒன்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களை அடக்குவதற்காக ஈரானிய அரசாங்கம் கொடூரமாக செயற்பட்ட நிலையில் உயிரிழந்த நூற்றுக்கணக்கானோரின் முகங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களுக்கு கசிந்துள்ளன.
இந்நிலையில், மிகவும் வேதனையூட்டும் குறித்த புகைப்படங்கள் மங்கலாக்கம் இன்றி வெளியிட முடியாத அளவுக்கு மிக மோசமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொடூரமான தாக்குதல்கள்
ஈரான் - தெஹ்ரானில் உள்ள ஒரு மரணவியல் மையத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த புகைப்படங்கள், குறைந்தது 326 பேரின் படுகாயமடைந்த முகங்களை காட்டுகின்றன. இவர்களில் 18 பேர் பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பல குடும்பங்களுக்கு, தங்கள் உறவினர்களை அடையாளம் காண ஒரே வழியாக இந்தப் புகைப்படங்களே இருந்ததாக கூறப்படுகிறது. பலர் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 69 பேரின் புகைப்படங்களில், பாரசீக மொழியில் “ஜான் டோ” அல்லது “ஜேன் டோ” என எழுதப்பட்டிருந்ததாகவும் இதன் மூலம், புகைப்படம் எடுக்கப்பட்ட நேரத்தில் அவர்களின் அடையாளம் தெரியாமல் இருந்ததை குறிப்பதாகவும் கூறப்படுகின்றது.
அதேநேரம், தெளிவான பெயர்களுடன் அடையாள அட்டைகள் வெறும் 28 பேருக்கு மட்டுமே இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
அலி கமெனியின் கருத்து
இறந்த திகதி குறிப்பிடப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்டவர்களில், பெரும்பாலானவர்களுக்கு ஜனவரி 9 என பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தெஹ்ரானில் போராட்டக்காரர்களுக்கு மிகவும் உயிரிழப்பு ஏற்பட்ட இரவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

வெளியாகியுள்ள இந்தப் புகைப்படங்கள், ஈரானிய அரசால் கொல்லப்பட்டதாக நம்பப்படும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளில் ஒரு சிறிய பகுதியையே காட்டுவதாக கூறப்படுகிறது.
டிசம்பர் இறுதியில் தொடங்கிய போராட்டங்கள் முதல், நாடு முழுவதும் அவை எவ்வாறு பரவின என்பதை சர்வதேச ஊடகங்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தன.
ஆனால் அரசால் விதிக்கப்பட்ட முழுமையான இணைய முடக்கம் காரணமாக, அரசின் வன்முறையின் முழு அளவை பதிவு செய்வது மிகவும் கடினமாகியுள்ளது.

ஈரானின் உயர்மட்ட தலைவர் அயத்துல்லா அலி கமெனி, பல ஆயிரம் பேர் உயிரிழந்ததை ஒப்புக்கொண்டிருந்தாலும், அதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர் கிளர்ச்சியாளர்கள் என அழைத்தவர்களே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
இணைய முடக்கம் மூன்றாவது வாரத்திலும் தொடர்ந்தாலும், சிலர் மிகக் குறைந்த அளவில் தகவல்களை வெளியில் கொண்டு வர முடிந்துள்ளதாக கூறுகின்றனர்.
தெஹ்ரானில் உள்ள கஹ்ரிசாக் மரணவியல் மருத்துவ மையத்திற்குள் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் நூற்றுக்கணக்கான மிக பிரத்தியே புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களுக்கு கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam