மைதானத்தில் மோதிக்கொண்ட விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர்! விதிக்கப்பட்டுள்ள அபராதம்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிக்கும் இடையே நடந்த போட்டிக்குப் பிறகு விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையே நடந்த காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் தற்போது உலகப் பேச்சாக மாறியுள்ளது.
லக்னோவில் நேற்று (01.05.2023) நடைபெற்ற இந்தப் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டி முடிந்ததும், பெங்களூரு அணியின் ஜாம்பவான் விராட் கோலிக்கும், லக்னோ அணியின் பயிற்றுவிப்பாளராகப் பணிபுரியும் கவுதம் கம்பீருக்கும் இடையே காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் நடைபெற்றது.
100 சதவீதம் அபராதம்
பரபரப்பான இச்சூழ்நிலையைத் தீர்க்க இரு தரப்பு வீரர்களும் தலையிட வேண்டியிருந்தது.
இந்த சம்பவத்திற்கு முன்பு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல்ஹக்கும் விராட் கோலியுடன் சில வார்த்தைகளை பரிமாறிக் கொண்டிருந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து, சம்பந்தப்பட்ட மூவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீருக்கு மொத்த போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்க இந்திய கிரிக்கெட் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
நவீன் உல்-ஹக்கிற்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Fines for breaching the IPL Code Of Conduct yesterday (lSG vs RCB):
— pratap (@9ineblues) May 2, 2023
Virat Kohli - 1.07cr (100%).
Gautam Gambhir - 25 Lakhs (100%).
Naveen Ul Haq - 1.79 Lakhs (50%).
Last night match between RCBwhere they started with sledging and ended with verbal abuse and browl#RCBvLSG pic.twitter.com/Uz7n0Sjlvu