இடியுடன் கூடிய கனமழை: மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று(18) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வட-மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மி.மீட்டர் கனமழை பெய்யக்கூடும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மேற்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் காலையிலும் மழை பெய்யக்கூடும்என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan