முல்லைத்தீவில் 100 நாட்கள் செயல்முனைவின் 04 ஆவது நாள் போராட்டம்(Photo)
'வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' எனும் 100 நாட்கள் செயல்முனைவின் நான்காம் நாள் போராட்டம் இன்று (04) வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது.
மக்களின் கோரிக்கைகள்
இந்த போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த தழிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், சிவில் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர்,செயற்பாட்டாளர் என 150 இற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதேவேளை, 05ம் நாள் போராட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காந்தி பூங்காவில் நாளை (05) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri