சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து 100 நாள் போராட்டம் கிளிநொச்சியில் ஆரம்பம்
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது தொடர்ச்சியாக வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்தினை பல்வேறு மட்டங்களில் முன்னெடுத்து வருகின்றது.
2022இல் 100 நாள் செயல்முனைவு
அதன் அடிப்படையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ம் திகதி அடையாளப்படுத்தப்பட்ட 100 நாள் செயல்முனைவு என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்திற்குள் மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வினை முன்வைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக 2025ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி இன்று தொடக்கம் கார்த்திகை மாதம் எட்டாம் திகதி வரை தொடர்ச்சியான 100 நாட்களும் சுழற்சி முறையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
கவனயீர்ப்பு போராட்டம்
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருந்திருந்தால் இதனைதான் செய்திருப்பார்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இதன் முதல் நாளான இன்று 01.08.2025 இன்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
கிரீன்லாந்திற்கு படைகளை அனுப்பும் ஜேர்மனி, பிரான்ஸ் - ட்ரம்ப்பிற்கு அழுத்தம் அதிகரிப்பு News Lankasri