நிலத்தை பாதுகாக்க பொங்கி எழும் மன்னார் இளையோர்: விழிப்புணர்வு போராட்டத்துக்கும் அழைப்பு
பல்தேசிய கம்பனிகளின் கனியவளச் சுரண்டலால் பாதிக்கப்படும் மன்னார் மாவட்டத்தின் மக்கள் இருப்பையும் பூர்வீக நிலத்ததையும் பாதுகாக்க மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து எதிர்வரும் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் அடையாள விழிப்புணர்வு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஏற்படு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் வைத்து அவர்கள் இந்த விடயத்தை கூறியுள்ளனர்.
உலகளவில் பரந்துபட்ட கேள்வி
மேலும் கூறுகையில், மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றாக மணல் இருக்கின்றது. இந்த மணல் விசேடமாக இல்மனைற் கனிமத்தை கொண்டதாக இருபதனால் அதற்கு உலகளவில் பரந்துபட்ட கேள்வி இருந்து வருகின்றது.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவுஸ்திரேலிய பல்தேசிய நிறுவனம் ஒன்று குறித்த இல்மனைட் மணலை அகழ்ந்து எடுக்க முயற்சித்து வருகின்றது. அனாலும் அதற்காக அனுமதிகள் இழுபறியில் இருந்து வந்த நிலையில் இந்த அரசாங்கத்தினால் அது வழங்கப்படுவதற்கான சுழல் உருவாகியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருந்திருந்தால் இதனைதான் செய்திருப்பார்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
குறிப்பாக அஸ்ரேலிய நிறுவனம் அகழ்வுக்கான சூழலியல் ஆய்வு அறிக்கைக்காக சுற்றுச்சூழல் அதிகாரசபையிடம் விண்ணபித்திருந்த நிலையில் அந்த நிதுவனம் ஆய்வு செய்து சாதகமான அறிக்கை வழங்கியுள்ளது. இதையடுத்து நிறுவனமயமான பல்தேசிய நிறுவனங்களுக்கு மணலை அகழ்வதற்கான அனுமதி வழங்கப்படும் ஏதுநிலை காணப்படுகின்றது.
கடல் நீர் உட்புகும் அபாயம்
இவ்வாறு பல்தேசிய நிறுவனங்கள் மன்னாரின் இல்மனைட் மணலை அகழ்ந்தெடுத்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மன்னாரின் மக்கள் வாழ் நிலங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்து மக்களில் இருப்பையும் கருவறுத்துச் சென்றுவிடும் நிலை உருவாகும்.
இந்த அழிவை தடுப்பதற்கும் எமது பூர்வீக நிலத்தையும் மக்கள் இருப்பையும் பாதுகாக்கவே கரு, நில பாதுகாப்பு என்ற கருப்பொருளுடன் மக்களை விழிபுணர்வு செய்ய போராட்டம் ஒன்றை செய்ய இளையராகிய நாம் வீதிக்கு இறங்கவுள்ளோம்.
எமது இந்த போராட்டத்துக்கு மன்னார் மாவட்ட மக்கள் குறிப்பாக இளைஞர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.
எமது இந்த போராட்டத்தில் விழிப்புணர்வு நாடகங்கள், கையெழுத்து போராட்டம் என்பன முதன்மை பெறவுள்ளதுடன் போராட்டத்தின் இறுதியில் மன்னார் மாவட்ட அரச அதிபருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென அவர்கள் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
