வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் திட்டம்: தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் (Photos)

Kilinochchi Mannar Sri Lankan Peoples President of Sri lanka Sri Lankan political crisis
By Ashik Aug 10, 2022 06:35 AM GMT
Report

புதிய இணைப்பு

வடக்கு, கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தின் 10வது நாள் போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் குறித்த போராட்டம் இன்று(10) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முதலாம் திகதி மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

பல அமைப்புக்கள் பங்கேற்பு

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் திட்டம்: தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்  (Photos) | 100 Day Mission Begins In Mannar

இதற்கமைய “கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்”எனும் தொனிப்பொருளில், வடக்கு கிழக்கு உட்பட 8 மாவட்டங்களில் சுழற்சி முறையில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் திட்டம்: தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்  (Photos) | 100 Day Mission Begins In Mannar

மேலும் இன்றைய போராட்டத்தில் கிராம அடிப்படை அமைப்புக்கள், விவசாய, கடற்றொழிலாளர் சங்கங்கள், பெண்கள் மற்றம் மாணவர் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

மன்னார்

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப்பொருளில் வடக்கு, கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல்திட்டத்தின் 9வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று காலை 10 மணியளவில் மன்னார் - தோட்டவெளி பிரதான நுழைவாயிலுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 9வது நாள் போராட்டம் இவ்வாறு இடம்பெற்றுள்ளது.

குறித்த செயல்திட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களால் 100 நாள் செயற்திட்டத்திற்கான பொது மகஜர் வாசிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில், “நாங்கள் நாட்டை துண்டாக்க தனியரசு கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம்.

அதிகாரப் பரவலாக்கம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும். 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்திற்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் திட்டம்: தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்  (Photos) | 100 Day Mission Begins In Mannar

இலங்கையின் வடக்கு, கிழக்கு வாழ் சிறுபான்மை தமிழ் மக்களான நாம் ஆட்சிக்கு வந்த சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களின் இனவாதக் கொள்கைகளால் பல்வேறு வழிகளிலும் அடக்கப்பட்டு வந்துள்ளோம்.

அது இன்று வரை தொடர்கிறது. இதுவே தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் குறித்து சிந்திக்கத் தூண்டியது.

இதன் நியாயத்தன்மையை பிராந்திய நட்பு நாடான இந்தியாவும் சர்வதேச நாடுகளும் என்றோ ஏற்றுக்கொண்டுள்ளன.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் திட்டம்: தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்  (Photos) | 100 Day Mission Begins In Mannar

அதன் விளைவே இந்தியா, இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் சார்ந்து இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் (1987 இன் இந்திய - இலங்கை உடன்படிக்கை), 1999 – 2008 வரையான காலப்பகுதியில் நோர்வேயின் மத்தியத்துவம் மற்றும் 2002இல் இலங்கையில் சமாதானம், புனர்வாழ்வு மற்றும் மீளக் கட்டுமானம் சார்ந்து பங்களிப்பு செய்வதற்கு ஜப்பானின் அமைச்சரவை யசூசி அகாசி அவர்களை நியமித்தமை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.

இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள்

1987இன் பின்னர் இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் எதுவுமே அதிகாரப்பரவலாக்கத்தை நிராகரிக்கவில்லை.

விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் அதிகாரப் பரவலாக்க உரையாடலை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் திட்டம்: தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்  (Photos) | 100 Day Mission Begins In Mannar

1987இல் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக அதிகாரப் பரவலாக்கத்துக்கான 13வது திருத்தச்சட்டத்தை அரசியலமைப்பில் இணைத்தார்.

1990இல் அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அரசியல் தீர்வுகளுக்கான திட்டங்களை முன்வைத்தார்.

இவரின் காலத்தில், 1991இல் மங்கள முனசிங்க தலைமையில் 45 பேர் கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

1994 சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாயிருந்த காலத்தில், 1995இல் நீலன் திருச்செல்வம் மற்றும் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தலைமையில் “ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு” அடங்கலான தீர்வுப்பொதி தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2001இல் ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக கொண்ட அரசாங்கம் நோர்வே மத்தியத் துவத்துடன் சுயாட்சி (பெடரல் ) முறையில் அதிகார பரவலாக்கத்துக்கு இணங்கியது நினைவுகூறத்தக்கது.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் திட்டம்: தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்  (Photos) | 100 Day Mission Begins In Mannar

2015இல் ஆட்சிக்கு வந்த விக்ரமசிங்க – சிறிசேன “நல்லாட்சி” அரசு, ஐ.நா. மனித உரிமைப் பேரவையால் ஏற்கப்பட்ட தீர்மானத்தின் இணைப்பங்காளியாக இருந்தது.

இத்தீர்மானத்தின் செயற்பாட்டு உறுப்புரை 16 ஆனது, அரசியல் தீர்வை, அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறது.

அந்தவகையில், வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு அதிகாரப் பரவலாக்கம் என்பது இலங்கையின் அரசியலமைப்பின் அங்கமாயிருப்பதுடன், சர்வதேச சமூகத்தினால், ஐக்கிய நாடுகள் சபையினாலும் வரவேற்கப்படுகின்ற ஒன்றாகும்”

வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகள்

ஆகவே, எமக்கான உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கும், நட்பு நாடான இந்தியாவுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் வலியுறுத்தி கொண்டு வடக்கு, கிழக்கு வாழ் மக்களான நாம், எமது சாத்வீகமான ஜனநாயகமான நூறு நாட்கள் செயல்முனைவு ஆவணி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் திட்டம்: தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்  (Photos) | 100 Day Mission Begins In Mannar

வடக்க, கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ , மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ். திலீபன் மற்றும் கிராம மட்ட அமைப்புகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலதிக செய்தி - யது

மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US