இலங்கையில் 9 பாகிஸ்தானியர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஒன்பது பாகிஸ்தானிய (Pakistan) பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பத்து வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்தே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிய நாட்டவர்கள்
இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதியன்று பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து நடத்திய சோதனையில், 581 கிலோ 34 கிராம் சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் மற்றும் 614 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்களை வைத்திருந்த பத்து பாகிஸ்தானிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை தண்டனையை அனுபவிக்கும் குற்றவாளிகளை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |