மின்வெட்டு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள பொய்யான தகவல்: எடுக்கப்படவுள்ள கடுமையான நடவடிக்கை
2023ஆம் ஆண்டு முதல் தினமும் 10 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பொய்யான தகவல்
நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ஜனவரி மாதம் முதல் தினமும் 10 மணிநேரம் மின்சாரம் தடைபடலாம் என நேற்றைய தினம் (20) இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று(21.12.2022) விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நடத்தியுள்ளார். இதன்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கை
மேலும் கூறுகையில்,2023ஆம் ஆண்டு முதல் தினமும் 10 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்பது பொய்யான தகவல்.
மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கண்டிப்பாக கட்டண திருத்தம் செய்யப்படும்.
கட்டண திருத்தத்திற்கு தேவையான சட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்ட அதிகாரத்திற்கான உறுதியை அட்டர்னி ஜெனரல் வழங்கியுள்ளார்.”என கூறியுள்ளார்.
மேலும் மின் உற்பத்திக்கான நிலக்கரி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அடுத்த சில நாட்களில் 300 மெகாவோட் மின் உற்பத்தியை இழக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் நேற்று தெரிவித்தது.
நாளொன்றுக்கு 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் |





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
