நாட்டு மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி! சேவையிலிருந்து விலகிய 10,000 பேருந்து ஊழியர்கள்
நாடளாவிய ரீதியில் சுமார் 10 ஆயிரம் பேருந்து சேவையாளர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட கோவிட் தொற்று காரணமாக பாரியளவில் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள பல பேருந்து சேவையாளர்கள் தமது தொழிலினை விட்டு வேறு தொழில்களுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக தனியார் பேருந்து தொழில்துறை பாரிய பிரச்சினையை எதிர்நோக்கி உள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பேருந்து சேவையாளர்களின் பற்றாக்குறை காரணமாக தற்போது நாடளாவிய ரீதியில் 50 சதவீதமான பேருந்துகள் மாத்திரம் சேவையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மக்களுக்கு தேவையான பேருந்து சேவைகளில் பல நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும்,பல மணி நேரம் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
