வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்
கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத் தவிர்த்துவிட்டு கொழும்பில் தங்கியிருந்துள்ளனர்.
கொழும்பு மற்றும் புறநகர் பிரதேசங்களில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவருகின்றவர்களில் பெரும்பாலானவர்களே இவ்வாறு வாக்களிப்பைப் புறக்கணித்து கொழும்பில் தங்கியிருந்துள்ளனர்.
வாக்களிப்பு வீதம்
நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இந்நாட்டின் தீர்மானமிக்க தேர்தல் அல்லாமை, அரசியல் மற்றும் தேர்தல் முறைமையின் மீது நம்பிக்கையின்மை, விரக்தி, வாக்களிப்பதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான செலவைத் தாங்க முடியாமை, இந்தத் தேர்தல் தொடர்பில் போதிய அறிவின்மை மற்றும் தொடர்ந்து பல தேர்தல்கள் நடந்தமை போன்ற காரணங்களால், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருந்து சுமார் 10 இலட்சம் பேர் வாக்களிக்கச் செல்லவில்லை என்று, தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக முன்னைய தேர்தல்களை விட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதமும் குறைவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam