இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 1.5பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் – 5 பேர் கைது
இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில், ‘யசிரு புத்த’ (Yasiru Putha) என்ற பலநாள் மீன்பிடிப் படகில் இருந்து சுமார் 110 கிலோகிராம் போதைப்பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த நவம்பர் 11ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், 52 முதல் 60 கிலோகிராம் வரையிலான ஹெரோயின் மற்றும் 50 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
117 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான
இதன் சந்தைப் பெறுமதி 1.5 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகம் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதன்போது படகுடன் ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த படகு மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களில் கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 17 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கடந்த ஆண்டு ஒக்டோபரில் அரசாங்கத்தின் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, கடற்படையினரால் இதுவரை 117 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[8K6UYK0