இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்
சுற்றுலா பயணிகளின் வருகையால் நாட்டிற்கு பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையின் மூலம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
சுற்றுலா வருமானம்
கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலா வருமானம் 875 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.
இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களை கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் 77.9 சதவீத அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் வருகை
கடந்த ஜூன் மாதத்தில் சுற்றுலா வருவாயாக 151.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேநேரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 61.7 சதவீதம் அதிகரிப்புடன் இந்த வருடத்தின் முதல் பாதியில் சுற்றுலா பயணிகளின் வருகை 1.01 மில்லியனாக பதிவாகியுள்ளது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 15 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
