உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம்! மக்களுக்கு முக்கிய அறிவித்தல் (photo)
பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிப்பதில் மட்டுப்பாடு விதிப்பதற்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, நிரப்பு நிலையங்களில், நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படும்.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்குவதில் நேற்று முதல் மீண்டும் வரையறைகள் விதிக்கப்பட்டன.
இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு 2,000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் சிற்றுந்து, மகிழுந்து மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு 8,000 ரூபாவுக்கும் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.
எனினும், இந்த எரிபொருள் விநியோக கட்டுப்பாடு பேருந்து, பாரவூர்தி மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இல்லை எனவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


பதினாறாவது மே பதினெட்டு 5 மணி நேரம் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
