இலங்கையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 497ஆக உயர்வடைந்துள்ளது.
1. தொடம்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட், நிமோனியா மற்றும் இரத்தம் விசமாகியமையினால் இவர் உயிரிழந்துள்ளார்.
2. கொழும்பு 9 பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட்,நிமோனியா மற்றும் புற்று நோய் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
3. கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். இருதய நோய், நீரிழிவு, கோவிட் மற்றும் உயர் குருதியழுத்தம் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
4. பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதான பெண் ஒருவர், தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இரத்தம் விசமாகியமை, சிறுநீரக நோய், கோவிட், நிமோனியா ஆகியனவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.