பிளாஸ்டிக்கை உண்ணும் புழுக்கள்
பிளாஸ்டிக்கை உணவாக உட்கொள்ளும் புழு தொடர்பான தகவல்ளை அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ளனர்.
Zophobas morio என அழைக்கப்படும் புழு superworm என பொதுவாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்த புழுக்கள் மூலம் பிளாஸ்டிக் மறுசுழற்சியில் புரட்சியை ஏற்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
மறுசுழற்சியின் திருப்புமுனை
இந்த புழுக்கள் தமது உயிர் வாழ்வதற்காக பிளாஸ்டிக் பொருளான polystyrene உண்பதாக ஆரம்ப கட்ட ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
புழுக்கள் தமது உடலில் இருக்கும் விசேட சமிப்பாடு கட்டமைப்பு மூலமாக பிளாஸ்டிக்கை சமிப்பாடு அடைய செய்வதாக ஆராய்ச்சியாளர் கண்டறிந்துள்ளனனர். இது மறுசுழற்சியின் திருப்புமுனை என ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
superworm என்ற இந்த புழு polystyreneயை கடித்து துண்டுகளாக்கி, உடலில் உள்ள சமிப்பாட்டு தொகுதியின் மூலம் ஜீரணிக்கின்றது எனவும் ஆராய்ச்சியாளர்கள் குழுவின் உறுப்பினரான கிறிஸ் ரின்க் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் உதிரி பாகங்களை உண்ணும் புழுக்கள்
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.
புழுக்களை மூன்று விதமாக பிரித்து, பல்வேறு உணவுகளை வழங்கியுள்ளனர். இதனடிப்படையில், இந்த புழுக்கள் மோட்டார் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உதிரி பாகங்களை கூட உண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.