இந்தியாவில் பரவும் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான Zika வைரஸ்
மனித மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்தான Zika வைரஸ் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் பரவியுள்ளது. இந்த மாநிலம் இந்தியாவில் அதிக சனத் தொகை கொண்ட மாநிலமாகும்.
உத்தர பிரதேசத்தில் 17 பிள்ளைகள் உட்பட 89 பேருக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பிரதான நகரமான நாக்பூரின் நிலைமை மோசமாகி வருவதாக நாக்பூர் மாவட்ட பிரதான வைத்திய அதிகாரி நேபாள் சிங் தெரிவித்துள்ளார்.
இதனை தவிர Zika வைரஸ் தொற்றுக்கு உள்ளான 14 பேர் கேரளா மாநிலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அடையாளம் காணப்பட்டனர்.
Zika வைரஸ் முதல் முறையாக இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.
நுளம்பு வகை ஒன்றின் மூலம் பரவும் இந்த Zika வைரஸ் பிள்ளைகளின் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் உடல் ரீதியான பலவீனங்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Zika வைரஸ் தொற்றிய பின்னர் மூளை சுருங்குவதுடன் தலையின் அளவு சிறிதாக மாறும் என கண்டறியப்பட்டுள்ளது.
நுளம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவும் அதேவேளை பாலியல் தொடர்புகள் மூலம் பரவக் கூடும் என கண்டறியப்பட்டுள்ளது.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan