ஐரோப்பாவின் கடைசி ஆக்கிரமிப்பு...! ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவு
ஐரோப்பாவின் கடைசி ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் அடுத்த தலைமுறைக்கு அமைதியை விட்டுச்செல்ல வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றியை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
The peace of our parents' generation is the peace that was left as a legacy by those who defeated the penultimate great aggression in Europe. And the peace of our children's generation is the peace we are gaining right now in the battles against the last aggression in Europe. pic.twitter.com/WFTaaV0H3l
— Володимир Зеленський (@ZelenskyyUa) May 24, 2023
ஐரோப்பாவில் இறுதிக்கட்ட ஆக்கிரமிப்பை முறியடித்தவர்கள் மரபுவழியாக விட்டுச்சென்றது அமைதி தான், நமது பெற்றோர்களின் தலைமுறையின் அமைதி. ஐரோப்பாவின் கடைசி ஆக்கிரமிப்புக்கு எதிரான போர்களில் நாம் இப்போது பெற்றுக்கொண்டிருக்கும் அமைதி தான், நமது குழந்தைகளின் தலைமுறையின் அமைதி' என்றும் பதிவிட்டுள்ளார்.
உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் உக்ரைனுக்கு சொந்தமான சுமார் 700 சொத்துக்களை ரஷ்ய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலைத் தொடங்குவதற்கு போதுமான ஆயுதங்கள் கீவிடம் இருப்பதாகவும், இருப்பினும் இன்னும் அதிகமான ஆயுதங்கள் தேவைப்படும் என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |