புடினின் மரணத்திற்கு காத்திருக்கும் ஜெலென்ஸ்கி.. கிறிஸ்துமஸ் தினத்தன்று பகிரங்கம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மரணத்தை விரும்புவதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மறைமுகமாக தனது கிறிஸ்துமஸ் உரையில் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் நீண்டகாலமாக தொடர்ந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 3 பேர் வரை கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் தனது மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து ஜெலென்ஸ்கி வெளியிட்ட உரையில் புடினின் மரணத்தை எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்துமஸ் வாழ்த்து
ரஷ்ய ஜனாதிபதி புடின் இல்லாது போக வேண்டும், மரணிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை மறைமுகமாக வெளிப்படுத்தி உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Merry Christmas! pic.twitter.com/okj9Yr1bFe
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) December 24, 2025
ஜெலென்ஸ்கி வெளியிட்ட உரையில், ரஷ்யா தாக்குதல் நடத்தி ஏற்படுத்தியுள்ள இந்த துன்பங்களுக்கு மத்தியிலும், உக்ரைனிய மக்களின் இதயங்களை அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் ஒற்றுமையை ரஷ்யாவால் எந்தவொரு குண்டு வீசி அழிக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முடியவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாம் அனைவரும் இன்று ஒரு கனவை காண்கிறோம், அது அனைவரிடம் உள்ள ஆசை தான், அவர் அழிந்து போகட்டும் என்று உக்ரைன் மக்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.