பக்முட் நகரில் தீவிரமடையும் போர்! விஜயம் செய்த ஜெலென்ஸ்கி
உக்ரைனின் பிரதான நகரான பக்முட் நகரத்தினை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பக்முட் நகரை கைப்பற்றுவதன் மூலம் உக்ரைன் நாட்டை எளிதில் கைப்பற்ற முடியுமென ரஷ்ய இராணுவப் படை எண்ணுகிறது.
போர் நடைபெறும் மையப்பகுதிக்கு சென்ற ஜெலென்ஸ்கி
இப்பகுதியில் கடந்த ஏழு மாதங்களாக கடுமையான போர் இடம்பெற்று வருகின்றது.
இச்சூழ்நிலையில், பக்முட் நகருக்கு அருகில் போர் நடைபெறும் மையப்பகுதிக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பயணம் மேற்கொண்டுள்ளார்.
உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்யப் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்திய நிலையில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அங்கு சென்றுள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதலை கண்டிக்கும் ஜெலென்ஸ்கி
கீவ் மற்றும் சபோரிஜியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் Rzhyschiv அருகே மாணவர் விடுதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
தென்கிழக்கு நகரமான சபோரிஜியாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மீது ராக்கெட் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் 25 பேர் காயமடைந்தனர்.
Zaporizhzhia. Right now, residential areas where ordinary people and children live are being fired at.
— Володимир Зеленський (@ZelenskyyUa) March 22, 2023
This must not become "just another day" in ?? or anywhere else in the world. The world needs greater unity and determination to defeat Russian terror faster and protect lives. pic.twitter.com/YnocW2yVaU
பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என உள்ளூர் தலைவர்கள் தெரிவித்தனர்.
இப்படி குடிமக்கள் மீதான ரஷ்யாவின் "மிருகத்தனமான" தாக்குதல்களை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கண்டித்த அதே வேளையில், உக்ரைனியப் படைகள் ஏழு மாதங்களுக்கும் மேலாக ரஷ்யாவை தடுத்து வைத்திருக்கும் கிழக்கு முன் வரிசை பகுதியையும் அவர் இப்பயணத்தின் போது பார்வையிட்டுள்ளார்.