வத்திக்கானில் தனியாக ஆலோசனை நடத்திய ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையில் சுருக்கமான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இறுதி ஊர்வலத்திற்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காரசாரமான வார்த்தைப் பரிமாற்றத்துக்குப் பிறகு...
இரண்டு ஜனாதிபதிகளும் சுமார் 15 நிமிடங்கள் சுருக்கமாக உரையாடிய போதிலும், இந்த கலந்துரையாடல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
The wish of Pope Francis is fulfilled.
— Naipamei Kaikai (@Kaikainaipaa) April 26, 2025
President Donald Trump and Zelenskyy are captured having a calm one on one conversation at the Vatican in Rome during the requiem.
The US and Ukraine unity that the Pope wished off is coming sooner pic.twitter.com/aZjy8ItDqo
வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதிக்கும் உக்ரைன் ஜனாதிபதிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வார்த்தைப் பரிமாற்றத்துக்குப் பிறகு இருவரும் சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
