இந்தியாவில் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள்
இந்தியாவில் (India) சட்டவிரோதமாக தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் பலரை குஜராத் பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அகமதாபாத்தில் 890 பேரும், சூரத்தில் 134 பேரும் உட்பட 1,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களை பயன்படுத்தி
குஜராத் பொலிஸார் இதுவரை மேற்கொண்ட மிகப்பெரிய நடவடிக்கை இது என்று இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இவர்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி பெங்கால் வழியாக நுழைந்ததாக இந்திய பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.
ஏனைய பங்களாதேஷ் பிரஜைகள் பல்வேறு மாநிலங்களில் தங்கியிருப்பதாகவும், அவர்களில் பலர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனித கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு, இந்திய பொலிஸார் அகமதாபாத்தில் இதேபோன்ற தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது சட்டவிரோதமாக வசிக்கும் 127 பங்களாதேஷ் பிரஜைகளை கைது செய்ததோடு, இவர்களில் நால்வர் அல்கொய்தா அமைப்பில் பணியாற்றியவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
