சூரிய மின்சக்தி மற்றும் சுற்றுலாத்துறைக்கு முதலீடுகள் தேவை: நியூசிலாந்து உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள்(Photo)
இலங்கைக்கான நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் ஆப்பிள்டன் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எச்.என் ஜயவிக்ரம ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று(16) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இதன்போது கல்வி,சுகாதாரம், விவசாயம், போக்குவரத்து, மீள்குடியேற்றம், குடிநீர் ஏனைய நலன்புரி விடயங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டம் விவசாயம், மீன்பிடி ஆகிய தொழில்களை மையமாகக் கொண்டவர்கள் வாழும் மாவட்டமாகும்.
இம்முறை சிறுபோகத்தில் 28000 ஹெக்டேயர் நெல்வேளாண்மை பயிர்ச்செய்கை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தற்போது நெருக்கடி மிக்க சூழ்நிலையில் வீட்டுதோட்ட பயிர்ச்செய்கையை ஊக்கப்படுத்தும் வகையில் மக்களுக்கு தெளிவூட்டல்களை மேற்கொண்டு உற்பத்தி முயற்சிகளை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை ஊக்குவித்து வருகின்றோம்.
கோரிக்கை
சூரிய மின்சக்தி, சுற்றுலாத்துறை ஆகியவற்றில் முதலீடுகள் வேண்டப்படுவதாகவும் அத்துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வது உசிதமாக அமையும் என இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான நியூஸிலாந்து பிரதி உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ
டிரவெலர், மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ், மாவட்ட செயலக நிர்வாக
உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ்.குருகுலசூரியவும் கலந்துக்கொண்டுள்ளனர்.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
