சஹ்ரானின் மனைவி வழங்கிய நான்கு நிமிட வாக்குமூலம்: உண்மை என்ன?
உயிா்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கியதாாியான சஹ்ரானின் மனைவி, வழங்கிய 4 நிமிட வாக்குமூலம் அடங்கிய ஒலிவடிவத்தை கா்தினால் உட்பட்ட வத்திக்கானின் உள்ள முக்கியமானவா்கள் செவிமடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினா் ஹாின் பொ்ணான்டோ(Harin Fernando) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும், தமது பாதுகாப்பு கருதி அந்த ஒலிவடிவம் எங்கு உள்ளது என்பதைக் கூறமுடியாது அவா் குறிப்பிட்டுள்ளா்.
எனினும் இது தொடா்பில் தொடா்ந்தும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் சரத் வீரசேகர(Sarath Weersekara) பொய் கூறுவதாக அவா் குறிப்பிட்டாா்.
எனவே அவரை பொது விவாதம் ஒன்றுக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினா் ஹாின் பொ்ணான்டோ இன்று சரத் வீரசேகரவுக்கு அழைப்பு விடுத்தாா்.
கெலனிகம, வீதி மாற்றிடத்தில் ஆயுதங்களுடன் பிடிப்பட்ட இரண்டு பாரவூர்திகளை விடுவிக்கக்கூறிய காவல்துறையின் உயரதிகாாி யாா் என்பதை அமைச்சா் வெளிப்படுத்தவில்லை.
உயிா்த்த ஞாயிறுத் தாக்குதலின் முக்கியதாரி நௌபா் மௌலவி என்று சரத் வீரசேகர, கூறுகிறாா்.
எனினும் ஒரே நாடு ஒரே சட்ட செயலணியின் தலைவா் அல்லாஹ்வே காரணம் என்று கூறுகிறாா் என்று ஹாின் பொ்ணான்டோ தொிவித்தாா்.
மாலு மாலு விருந்தகத்தில் காவல்துறை உயரதிகாாி தங்கியிருக்கவில்லை என்றும் அமைச்சா் பொய் கூறுகிறாா்.
உயிா்த்த ஞாயிறு தாக்குதல் நடந்தபோது அவா் விடுமுறையில் இருந்ததாக கூறுகிறாா்.
எனினும் இவ்வாறான தாக்குதல் ஒன்று இடம்பெறும்போது அவா் எவ்வாறு விடுமுறையில் செல்லமுடியும் என்று ஹாின் பொ்ணான்டோ கேள்வி எழுப்பினாா்.
இதேவேளை குறித்த மேல் மாகாண சிரேஸ்ட காவல்துறை உதவி அதிபா், ஸ்ரீலங்கா கிாிக்கட்டின் முக்கிய பாதுகாப்புப் பொறுப்பில் நியமிக்கப்பட்டாா் என்பதை சரத் வீரசேகர மறுத்துள்ளபோதும் அவருக்கு ஸ்ரீலங்கா கிாிக்கட் 150ஆயிரம் ரூபா வேதனத்தில் நியமனத்தை வழங்கிய நியமனக்கடிதத்தை ஹாின் பொ்ணான்டோ இன்று நாடாளுமன்றத்தில் சமா்ப்பித்தாா்