கையடக்க தொலைபேசியில் சஹ்ரானின் படங்கள் : விசாரணையின் பின்னர் ஒன்பது பேரும் விடுதலை
புதிய இணைப்பு
மட்டக்களப்பு கொழும்பு வீதியான ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில் அக்குரனையில் இருந்து காத்தான்குடி நோக்கி பிரயாணித்த வாகனம் ஒன்றை இன்று சனிக்கிழமை (12) நிறுத்தி இராணுவத்தினர் சோதனையிட்டபோது கையடக்க தொலைபேசியில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதியான சஹ்ரான் ஹாசீமின் படங்களை வைத்திருந்ததையடுத்து அந்த வாகனத்தில் பிரயாணித்த 9 பேரையும் விசாரணையின் பின்னர் விடுதலை செய்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவின்கீழ் உள்ள ரிதிதென்னை சந்தியில் பொலிசார் வீதிச் சோதனைச் சாவடி அமைத்து இதில் இராணுவத்தினரும் பொலிசாரும் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் அக்குரனையில் இருந்து வான் ஒன்றில் 9 பேர் காத்தான்குடி நோக்கி சம்பவதினமான இன்று காலை 11 மணியளவில் பிரயாணித்தபோது குறித்த வீதிச்சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இராணுவத்தினர் கோவிட் தடுப்பூசி ஏற்றியுள்ளதா என அதற்கான அட்டையைகேட்டு சோதனையிட்டனர்.
இதன் போது அதில் பிரயாணித்த முகமட்பாரூக் முகமட் ஆசாத் என்பவர் தனது கையடக்க தொலைபேசியில் தடுப்பூசி ஏற்றியதற்கான அட்டையின் படத்தை காட்ட முற்பட்டார்.
இதன்போது கையடக்க தொலைபேசியில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதியான ஸாரான் காசீம் படங்கள் உள்ளிட்டவையை வைத்திருந்ததை கண்டுள்ள இராணுவத்தினர் அவருடன் பிரயாணித்த 9 பேரையும் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து அவர்களை விசாரணையின் பின்னர் விடுதலை செய்தனர்.
முதலாம் இணைப்பு
வாகனம் ஒன்றை நிறுத்தி இராணுவத்தினர் சோதனையிட்டபோது கையடக்க தொலைபேசியில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதியான சஹ்ரான் காசீம் படங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருந்ததையடுத்து அந்த வாகனத்தில் பிரயாணித்த 9 பேரையும் கைது செய்து விசாரணைக்காக வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவின்கீழ் உள்ள ரிதிதென்னை சந்தியில் பொலிஸார் வீதிச் சோதனைச்சாவடி அமைத்து இதில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அக்குரைனையில் இருந்து வான் ஒன்றில் 9 பேர் காத்தான்குடி நோக்கி சம்பவதினமான இன்று காலை 11 மணியளவில் பயணித்த போது குறித்த வீதிச்சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இராணுவத்தினர் கோவிட் தடுப்பூசி ஏற்றியுள்ளதா என அதற்கான அட்டையைக் கேட்டுச் சோதனையிட்டனர்.
இதன் போது அதில் பயணித்த முகமட்பாரூக் முகமட் ஆசாத் என்பவர் தனது கையடக்க தொலைபேசியில் தடுப்பூசி ஏற்றியதற்கான அட்டையின் படத்தை காட்ட முற்பட்டுள்ளார்.
இதன்போது கையடக்க தொலைபேசியில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதியான சஹ்ரான் காசீம் படங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருந்ததைக் கண்டுள்ள இராணுவத்தினர் அவருடன் பயணித்த 9 பேரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அவர்களை வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ முகாமிற்கு விசாரணைக்காக
அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.



