சஹ்ரான் உளவாளி அல்ல, வதந்திகளுக்கு உயிரூட்ட வேண்டாம்! - அமைச்சர் சரத் வீரசேகர கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம், புலனாய்வுப் பிரிவின் உளவாளி அல்ல என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
சஹ்ரான் அரச உளவாளி எனவும், அவருக்கு சம்பளம்கூட வழங்கப்பட்டுள்ளது எனவும் வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"சஹ்ரான் புலனாய்வுப்பிரிவின் உளவாளி அல்ல. எமது கொடுப்பனவுப் பட்டியலிலும் அவர் இல்லை. அவ்வாறு ஏதாவது தகவல் இருந்தால் உடன் சி.ஐ.டிக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். அதனைவிடுத்து வதந்திகளுக்கு உயிரூட்டக்கூடாது.
புலனாய்வுப் பிரிவினர், சஹ்ரானிடமிருந்து எந்தவொரு தகவலையும் பெறவில்லை.புலனாய்வு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கவில்லை. எனவே, இத்தகைய குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றோம்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, சி.ஐ.டியிடம் சென்று அழுது புலம்பியுள்ளார். தனது அறிவிப்புக்கு மன்னிப்புக் கோரியும் உள்ளார். அவருக்கு எதிராக நிச்சயம் வழக்குத் தாக்கல் செய்யப்படும்" - என்றார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 21 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam