விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் 733 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணிநேரத்தில் 733 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் இன்று (06.02.2024) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த அளவிலானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 589 பேரும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 144 பேரும் அடங்குகின்றனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்டுள்ள போதைப்பொருட்கள்
கைதானவர்களில் 4 பேர் புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகத்தால் தேடப்படும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 8 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்புகளின் போது 130 கிராம் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |