நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுக்குள் இருக்கும் இரகசியங்கள்..!
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள யுக்திய நடவடிக்கையானது முதலில் நாடாளுமன்றத்திற்குள் இருந்து ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் தான் சோதனைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அங்கிருந்து பல இரகசியங்கள் வெளிவரலாம் என்று காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான மொஹமட் பஸ்லி தெரிவித்தார்.
லங்காசிறீக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த, வெளியில் அதிகமாக பேசப்படாத இரகசியம் தான், போதைப்பொருள் மற்றும் பாதாள உலக் குழுக்களின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருப்பது யார் என்பது.
நாடாளுமன்றத்தில் இருப்பவர்களும், அரசியலுடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகளும் தான் இவற்றுடன் தொடர்பிலிருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த யுக்திய செயற்பாடு என்பது ஒரு கண்துடைப்பு செயற்பாடுதான் எனவும் அவர் குறிப்பிட்டார்.
2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெற்ற வன்முறையில் போராட்டக்காரர்களை தாக்க வந்த குண்டர்களின் பின்னால் தேசபந்து தென்னக்கோனும் இருக்கின்றார் என்பது தான் எங்களது நிலைப்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் - காலை திருவிழா




