டுபாயிலிருந்து வந்த இளைஞர்கள் விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 14 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்றதற்காக இலங்கை மற்றும் இந்திய நாட்டவர்களான இரண்டு விமான பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கொண்டு வந்த 06 சூட்கேஸ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 69,400 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 347 சிகரெட் அட்டைப் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இவர்கள் டுபாயிலிருந்து நேற்றிரவு 07.20 மணியளவில் எமிரேட்ஸ் விமானம் ஊடாக நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இலங்கை விமானப் பயணி இரத்தினபுரியைச் சேர்ந்த 26 வயதுடைய தொழிலதிபர் எனவும், இந்திய விமானப்பயணி 23 வயதுடைய தொழிலதிபர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரண்டு விமானப் பயணிகளும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு நாளை ( 03) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக ராணுவத்தைக் களமிறக்கும் பிரித்தானிய அரசு News Lankasri
