பிள்ளையானுடன் நின்று புகைப்படம் எடுக்கப் போட்டிபோடும் மட்டக்களப்பு இளைஞர்கள்!!
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள இளைஞர்கள் போட்டிபோடும் ஒரு நிலை மட்டக்களப்பில் உருவாகி வருகின்றது.
போராட்டத்தையும், அந்தப் போராட்டத்தை தோல்வியுறச் செய்வதில் பிள்ளையான் என்ற நபரின் வகிபாகத்தையும் அறிந்திராத சிறுவர்களும் மற்றும் இளம் தலைமுறையினருக்கு பிள்ளையான் என்ற பிம்பம் ஒரு கதாநாயகனாகவே வடிவமைக்கப்பட்டு வருகின்றது.
பிள்ளையான் மேற்கொண்டதாகக் குற்றம்சாட்டப்படும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள் போன்றன பற்றிய விபரம் தெரியாத இளையவர்கள், பிள்ளையானுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதை ஒரு பெருமைக்குரிய விடயமாகவே கருதி வருகின்றார்கள்
அந்த வரிசையில் மட்டக்களப்பின் த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துகொண்டதான ஒரு புகைப்படம் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் மற்றும் டெலோ அமைப்பின் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் ஜனா போன்றவர்கள் பிள்ளையானின் இரண்டு பக்கத்திலும் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட பெருமைமிகு நிகழ்வானது, மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை மேம்படுத்தவே என்பதை, இவர்களது ஆதரவாளர்கள் போலவே நாங்களும் நம்புகின்றோம்.
நன்றி:TMVP Media unit

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
