திருகோணமலையில் படகு கவிழ்ந்ததில் இளைஞர் ஒருவர் பலி
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இறக்கக்கண்டி பகுதியில் படகு கவிழ்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் இறக்கக்கண்டி - வாழையூற்று பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய துஷ்யந்தன் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மூன்று இளைஞர்கள் இணைந்து பலாப்பழம் ஆராய்வதற்காக படகில் சென்ற போது படகு கவிழ்ந்துள்ளது.
இதன்போதே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவரும் தப்பியுள்ளதாகவும் தெரியவருகிறது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்பொழுது நிலாவெளி வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





கூலி பட நடிகர் உபேந்திரா மற்றும் மனைவிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! கலக்கத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
