முல்லைத்தீவில் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் பலி
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான 25 வயதுடைய இளைஞரொருர் உயிரிழந்துள்ளார் .
நேற்று (17) இரவு கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் ,புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் .
இதன்போது உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்படட நிலையில் இன்று (18) முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் உடலத்தை பார்வையிட்டு சம்பவம் இடம்பெற்ற இடத்தையும் பார்வையிட்ட பின்னர் குறித்த நபருக்கு பி. சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு பெறுபேறுகள் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி பி .சி .ஆர் பரிசோதனைகளில் கோவிட் தொற்று இல்லையெனில் உடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்கப்படும். தொற்று இனங்காணப்பட்டால் உரிய கோவிட் நடைமுறைக்கமைய தகனம் செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் சுதந்திரபுரம் கொலனி பகுதியை சேந்த 25 வயதுடைய குணராசா நிதர்சன் என்பவராவார் .
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் புதுக்குடியிருப்பு பொலிஸார் கத்திக்குத்தை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.




இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
