தென்னிலங்கையில் இளைஞர் ஒருவர் சுட்டுப் படுகொலை
இளைஞர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் காலி - இக்கடுவை பிரதேசத்தில் இன்று (19.07.2023) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அப்பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஆர்.பிரசன்ன என்ற நபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை
வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் குறித்த இளைஞர், மதிய உணவுக்காக மோட்டார் சைக்கிளில் வீடு சென்று திரும்பும் போது வீதியில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியில் வந்த இருவர் கைத்துப்பாக்கியால் அவர் மீது சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞரின் சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த குறித்த நபர், பாதாளக் குழுக்களுடன் தொடர்பில் இருந்தவர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri