தாய் - தகப்பன் பாதுகாப்பில் இருந்த 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி..! தமிழர் பகுதியை அதிர வைத்த நீதிமன்ற தீர்ப்பு
யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுவனை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பெற்றோர் பாதுகாப்பில் இருந்த 5 வயது சிறுவனை, இளைஞர் ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 19 வருட சிறைத்தண்டனை விதித்து , யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் தீர்ப்பளித்துள்ளார்.
19 வருட சிறைத்தண்டனை
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த சிறுவனை தவறாக வழி நடத்திய குற்றத்திற்காக 7 வருட சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சிறுவனை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 12 வருட சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் தண்டப்பணமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 05 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும், தவறும் பட்சத்தில் 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் தீர்ப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.