மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவர் கைது

Sri Lanka Police Nuwara Eliya Crime
By Thiva Aug 30, 2026 05:59 AM GMT
Report

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலாந்த, விநாயகபுரம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தனது மனைவியை தாக்கி கணவர் கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து கணவர் நேற்று மாலை (29) பிற்பகல் நுவரெலியா பொலிஸில் சரணடைந்துள்ளார்.

குடும்ப தகராறை தொடர்ந்து, 43 வயதுடைய சித்ரா தேவி என்ற பெண், அவரது கணவரால் கோடரியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்டு சிகிச்சை பெறுவதற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

கணவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைவு

இந்த சம்பவத்தையடுத்து, குறித்த பெண்ணின் 32 வயதுடைய கணவர், தான் மனைவி மீது கூரிய ஆயுதத்தால் கடுமையாக தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்து நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தானாகவே சரணடைந்துள்ளார்.

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவர் கைது | Husband Kills Wife By Attacking With Sharp Weapon

தனிப்பட்ட குடும்பத்தகராறு காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் குற்றப்புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டு நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தானாகவே சரணடைந்த சந்தேகநபரை இன்று (30) நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

சில பொருட்களின் விலை உயர்வு தொடர்பில் பரவும் தகவல்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

சில பொருட்களின் விலை உயர்வு தொடர்பில் பரவும் தகவல்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

கொழும்பில் பட்டப்பகலில் பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற யுவதியை கடத்திய காதலன்! வெளியான காரணம்

கொழும்பில் பட்டப்பகலில் பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற யுவதியை கடத்திய காதலன்! வெளியான காரணம்

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US