இரண்டு டெனிம்களைத் திருடிய இளைஞருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
கொழும்பின் முக்கிய விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து இரண்டு டெனிம்களைத் திருடிய இளைஞர் ஒருவருக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள முக்கிய ஆடைக் காட்சியறை ஒன்றில் இருந்து இருபதினாயிரம் ரூபா மதிப்புள்ள இரண்டு டெனிம் காற்சட்டைகளை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் 2017ம் ஆண்டில் நடைபெற்றிருந்ததோடு குறித்த இளைஞர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
கடூழிய சிறைத்தண்டனை
அதன் பின்னர் சாட்சியங்கள் இன்றி 06 வருடங்களாக நடைபெற்ற வழக்கு தொடர்பான தீர்ப்பு நேற்று(10.07.2023) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தது.
அதன் போது டெனிம்களைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட கொழும்பு 08 ஐ வசிப்பிடமாகக் கொண்ட சந்தேகநபரான இளைஞருக்கு, ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |