நீதிமன்றத்தின் சுயாதீன விசாரணையை விமர்சித்த இளைஞனுக்கு விளக்கமறியல்
மன்னார் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு விசாரணை தொடர்பாகவும், நீதிமன்றத்தின் சுயாதீன விசாரணையை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட இளைஞன் ஒருவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த உத்தரவானது நேற்று (01.10.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் சட்டத்தரணிகள் சார்பாக இந்த இளைஞருக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள வழக்கு
மன்னார் பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞன் வைத்தியர் அர்ஜீனா உள்ளடங்களாக நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகள் குறித்தும், மன்னார் நீதிமன்றம்,சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாருக்கு எதிராகவும் அவ நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தமை தொடர்பிலும், மன்னார் சட்டத்தரணிகள் ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் இளைஞருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இளைஞன் கடந்த மாதம் மன்றில் முன்னிலை ஆகாத நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தார்.
இதன் போது இளைஞன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், இளைஞன் வைத்தியர் அர்ஜுனா உள்ளடங்களாக சில வழக்கு விசாரணைகள் குறித்து நீதி மன்றம்,சட்டத்தரணிகள்,மற்றும் பொலிஸாரை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்திருந்தானர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |